ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு - 7 பார்வையாளர்கள் நியமனம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7 வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சி யர் குமாரவேல் பாண்டியன் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 6-ம் தேதி முதற் கட்டமாகவும், வரும் 9-ம் தேதி 2-ம் கட்டமாகவும் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் கால அட்ட வணையின்படி காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 4 ஒன்றி யங்களுக்கு 6-ம் தேதியும், கணியம்பாடி, அணைக்கட்டு மற்றும் வேலூர் ஆகிய 3 ஒன்றி யங்களுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் பணிகளை கண் காணிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உத்தரவின் பேரில் 7 ஒன்றியங்களுக்கு வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அதன்படி, காட்பாடி ஒன்றியத்துக்கு கூட்டுறவு சங்கங் களில் இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரையும்-(கைபேசி எண்:94430-51774),கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் ராமகிருஷ்ணன் (88705-05566), குடியாத்தம் ஒன்றியத் துக்கு குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர் தனஞ்செயன் (94877-56855), பேரணாம்பட்டு ஒன்றியத்துக்கு கலால் உதவி ஆணை யர் வெங்கட்ராமன் (94448-38637), அணைக்கட்டு ஒன்றியத்துக்கு கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் நவநீத கிருஷ்ணன் (94450-01131), கணியம்பாடி ஒன்றியத்துக்கு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் (99449-31659), வேலூர் ஒன்றியத் துக்கு வேலூர் வருவாய் கோட் டாட்சியர் விஷ்ணுபிரியா (94450-00417) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிக்கான தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை அந்தந்த வட்டார பார்வையாளர் களின் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்