ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக - மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங் களாக அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

அதன்படி, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக அக்டோபர் மாதம் 6-ம் தேதியும், கணியம்பாடி மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு 2-ம் கட்டமாக அக்டோபர் மாதம் 9-ம் தேதியும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

இந்த தேர்தலையொட்டி ஐஏஎஸ் அதிகாரியான சா.விஜயராஜ் குமார் என்பவரை வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக தமிழக மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. எனவே, தேர்தல் தொடர்பான புகார், தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார், பரிசுப்பொருட்கள் வழங்குவது தொடர்பான புகார் இருந்தால் மாவட்ட தேர்தல் பார்வையாளரான சா.விஜயராஜ்குமாரின் 94879-31295 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும், வாட்ஸ் அப் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இது தவிர, வேலூர் சுற்றுலா விருந்தினர் மாளிகை அறை எண்:2-ல் தங்கியுள்ள மாவட்ட தேர்தல் பார்வையாளரை பொது மக்கள் தேர்தல் தொடர்பான புகாரை தினசரி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரில் சந்தித்தும் தெரிவிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

சினிமா

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்