Regional01

800 மதுபாட்டில்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த கமலா (62) என்பவர், புதுச்சேரி வகை மதுபாட்டில்களை வாங்கி வந்து, அவற்றை ஆரியபிள்ளை என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பாலபந்தல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் நேற்று அந்த வீட்டிற்கு சென்று குளியல் அறையில் சாக்கு மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கமலாவை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT