அடவிநயினாரில் 10 மி.மீ. மழை :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 10 மி.மீ., குண்டாறு அணையில் 4 மி.மீ., தென்காசியில் 3 மி.மீ., ஆய்க்குடியில் 2.40 மி.மீ., கருப்பாநதி அணையில் 2 மி.மீ., செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது.

குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 67.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 66.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.77 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 123.50 அடியாகவும் இருந்தது.

பாபநாசத்தில் 7 மி.மீ. மழை

பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 7 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல சேர்வலாறு அணைப்பகுதியில் 4 மி.மீ. மழை பெய்திருந்தது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாப நாசம் அணை நீர்மட்டம் 86.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 958 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,204 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 62.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 41 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந் தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

52 mins ago

இணைப்பிதழ்கள்

53 mins ago

வணிகம்

38 mins ago

தமிழகம்

58 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்