நாடு முழுவதும் கடந்த 2020 அக்டோபர் 16 முதல் நவம்பர் 20 வரை நடந்த பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் அமைப்பால் நடத்தப்பட்ட பிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் போட்டியில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் கோட்ஸ் ரோடு ஷோரூம், தேசிய அளவில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தின் வெற்றியாளராக சென்னை தி.நகர் உஸ்மான் சாலை ஷோரூம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேசிய அளவில் சிறந்த விற்பனை மேலாளர் 1, 2-ம் நிலை மற்றும் தென் மண்டல சிறந்த விற்பனை மேலாளராக ஜிஆர்டி ஷோரூம் மேலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அளவிலான, தென் மண்டல அளவிலான விருதுகளை ஜிஆர்டி தொடர்ச்சியாக 4-வது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ‘அனந்த்’ அனந்தபத்மநாபன் கூறும்போது, ‘‘எங்கள் தயாரிப்பு வடிவமைப்புகள், சேவைப் பணிகள் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதிலும், ஷோரூம் சூழல் வாடிக்கையாளர்களுக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். தொடர்ந்து 4 ஆண்டுகளாக நாங்கள் பெற்று வரும் விருதுகளே இதற்கு சான்று’’ என்றார்.
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘விருதுகள், எங்களுக்கும், எங்கள் குழுவினருக்கும் பெருமிதம் அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வந்ததைவிட இன்னமும் சிறப்பாக எங்கள் ஷோரூம்களில் இருக்கும் நகைகளை பார்த்து, மகிழ்வுடன் அவற்றை வாங்கிச் செல்கிறார்கள் என்பதே எங்களுக்கு மிகப்பெரிய பெருமிதத்தை அளிக்கிறது’’ என்றார்.