மதுரை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி அமைச்சர் உள்ளிட்டோரிடம் வழங்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் மீது அதிகாரிகள் விசார ணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி மக்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தியிடம் முதியோர் உதவித்தொகை கோரி 4 ஆயிரம் மனுக்கள் வரை வழங் கப்பட்டுள்ளன.
திமுக வென்ற தொகுதிகளில் பலரும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களிடம் மனுக்களை அளித்துள்ளனர். அதிமுக வென்ற தொகுதியிலிருந்து ஏராளமான மனுக்கள் எம்எல்ஏ.க்கள் மூலம் மட்டுமின்றி வாராந்திர குறைதீர் கூட்டம் வாயிலாகவும், தபால் மூலமும் அனுப்பப்பட்டுள்ளன.
அமைச்சர் பி.மூர்த்தியிடம் வழங்கப்பட்ட மனுக்கள் தாலு காவாரியாக பிரிக்கப்பட்டு ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் அதற்கான நடைமுறை விதிகளில் சிக்கல் இருந்தால் உரிய மாற்று வழி யில் மனுக்களுக்கு சாதகமாக முடிவு எடுக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘தாலுகா வாரியாக பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது வட்டாட்சியர்கள் ஆய்வு நடத்துகின்றனர். மனுவில் உள்ள தகவல் உண்மையாக இருந்தால் ஓய்வூதியம் வழங்க பரிந்துரைக்கப்படும். நிதி ஒதுக் கீடு செய்ய அரசு ஒப்புதல் அளிக் கும்பட்சத்தில் உத்தரவுகள் வழங் கப்படும். ஏற்கெனவே ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட பலரும் மீண்டும் ஓய்வூதியம் கேட்டு மனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீதும் தனியாக ஆய்வு நடக்கிறது’ என்றனர்.