புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடப்பன்வயலில் புத்தாஸ் வீரக்கலை கழகம் மற்றும் அமெச்சூர் டேக்வாண்டோ அமைப்பு சார்பில் ஆக.14-ம் தேதி கராத்தே தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வடக்குராஜ வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் பாலாஜி(19), கையில் துணியை சுற்றி, அதில் பெட்ரோலை ஊற்றி, நெருப்பை பற்ற வைத்து ஓடு உடைக்கும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக பாலாஜியின் உடலில் தீ பிடித்தது. இதையடுத்து, தீக்காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலாஜி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.