திருவண்ணாமலை: தி.மலை அண்ணா மலையார் கோயில் இணை ஆணையராக ஆர்.ஞானசேகர் பணியாற்றி வந்தார். இவர், கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையராக பணியாற்றிய கே.பி.அசோக்குமார், தி.மலை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பதவிக்கு கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையராக (கூடுதல் பொறுப்பு) நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.