திருநெல்வேலியில் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பூதேவி சிலை. படம்: மு.லெட்சுமி அருண். 
Regional01

வீட்டிலிருந்த 11 கிலோ ஐம்பொன் சிலை மீட்பு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி டவுண் சாலியர் தெருவில் ஓய்வுபெற்ற அரசு பணியாளர் கோவிந்தன் (74) என்பவரது வீட்டில் 2 அடி உயரம் 11 கிலோ எடையுள்ள ஐம்பொன் பூதேவி சிலை இருப்பதாக, திருநெல்வேலி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கோவிந்தன் வீட்டுக்கு போலீஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர். பூதேவி சிலையை உறவினர் ஒருவரிடம் இருந்து பெற்றதாகவும், பல ஆண்டுகளாக தங்கள் வீட்டில் இச்சிலை வழிபாட்டில் இருப்பதாகவும் கோவிந்தன் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. சிலையை போலீஸார் பறிமுதல் செய்து, திருநெல்வேலி சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT