நாமக்கல்: தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளை திறக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் டி.சரவணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் இந்தாண்டு அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் 1,650 மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாணவர் சங்க நிர்வாகிகள் தங்கராஜ், கோகுல், கோபி, கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.