விளைச்சல் மிகுதியால் கொய்யா விலை சரிவு பறிப்பு கூலி கூட கிடைக்காமல் வேதனை :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் விளையும் கொய்யா பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மா, கொய்யா பழங்களை மதுரை மற்றும் முடுவார்பட்டி பழச் சந்தைகளுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர். கடந்த காலத்தில் 35 கிலோ எடையுள்ள கொய்யாவுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை கிடைத்தது. தற்போது ஓரளவு மழை பெய்து வருவதால் அதிக அளவில் கொய்யாப் பழங்கள் விளைந்துள்ளன. அதனால், சந்தையில் 35 கிலோ கொய்யா ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது.

இதனால் கூலி ஆட்களுக்கு பறிப்புக் கூலி கூட கொடுக்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் உள்ள மா, கொய்யா மரங்களைக் காப்பாற்றவும், இப்பழங்களை பதப்படுத்தவும் குளிர்பதனக் கிடங்கும், பழக்கூழ் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்