Regional01

கார்கில் வெற்றி தினம்: மேஜர் சரவணன் நினைவுத் தூணில் வீர வணக்கம் :

செய்திப்பிரிவு

திருச்சி: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, திருச்சி வெஸ்ட்ரி ரவுண்டானாவில் உள்ள மேஜர் சரவணன் நினைவு தூணில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

117 பிரதேச ராணுவப் படையின் திருச்சி ஸ்டேஷன் கமாண்டர் கர்னல் கே.ஜாய் தலைமையில், மேஜர் அக்சய் புன்ச், என்சிசி விமானப் படை தலைமை அதிகாரி சி.குணசேகரன், என்சிசி ராணுவப் பிரிவு தலைமை அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் காளியப்பன், கர்னல் ரமனிக் கோசாமி மற்றும் மேஜர் சரவணன் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். இதேபோல, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT