Regional01

தண்ணீர் வாளியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எஸ்.வி.எம்.நகரைச் சேர்ந்தவர் சுமன் பாபு, வசந்தகுமாரி தம்பதியின் 10 மாத ஆண் குழந்தை துருவ் கிருஷ்ணன். வீட்டின் அருகே தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நேற்று காலை அங்கிருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் இல்லாத நிலையில் தண்ணீரில் மூழ்கிய குழந்தையை உயிருக்கு ஆபத்தான நிலையில் பெற்றோர் மீட்டனர். பின்னர், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT