சென்னையில் ரூ.2,500 கோடியில் பூங்காவா? : நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல் லூர் ஒன்றியம் பூனாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் மரங்களுடன் கூடிய குறுங்காட்டில், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையிலான கட்டமைப்பு ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மேலும் 6 மாநக ராட்சிகள் உருவாக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநகராட்சிகள், நகராட்சிகளை விரிவுபடுத்தவும், ரூ.10 கோடிக்கு வருவாய் உள்ள பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தவும் ஆலோசிக்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டா லின் முறைப்படி அறிவிப்பு வெளி யிடுவார்.

சென்னையில் ரூ.2,500 கோடி யில் பூங்கா அமைக்கப் போவதாக நான் அறிவித்துள்ளதாகவும், இப்போது அது தேவையா என பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கேட் டுள்ளதாகவும் சமூக வலைதளங் களில் தகவல் பரவி வருகிறது. அது தவறான தகவல். அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் களை தூய்மைப்படுத்துவதுடன், அவற்றிலுள்ள நீரை மறுசுழற் சிக்கு உட்படுத்தி மீண்டும் பயன்படுத்தும் வகையிலும், ஆறுகளில் கொசு உற்பத்தியை குறைப்பதற்காகவும், கரையோரங்களில் பூங்கா அமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் தற்போது ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இது குறித்து திட்ட அறிக்கை தயார் செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் விரிவாக தெரிவிக் கப்படும் என்றார்.

அப்போது, ஆட்சியர் சிவராசு, எம்எல்ஏக்கள் தியாகராஜன், ஸ்டாலின் குமார், சீ.கதிரவன், கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்