Regional01

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் :

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி சமயபுரம் சோழன் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(47). கூலித் தொழிலாளி. கடந்த 1-ம் தேதி சமயபுரம் அருகே விபத்தில் சிக்கிய இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செல்வராஜூக்கு நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, செல்வராஜின் மனைவி சுபத்ராதேவி, மகன் அசோக், மகள் கங்கா ஆகியோர், செல்வராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர்.

இதையடுத்து, அரசு மருத்துவமனை மருத்துவர் குழுவினர் நேற்று செல்வராஜின் உடலில் இருந்து சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றைப் பிரித்து எடுத்தனர். பின்னர், அவற்றில் ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும் பொருத்தப்பட்டன. கல்லீரல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு, மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு பொருத்தப்பட்டது.

SCROLL FOR NEXT