Regional01

கேரளாவில் இருந்து வாகனத்தில் : கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப் பிரியர்கள், அருகில் உள்ள கேரளா மாநிலத்துக்கு சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர். இதை தடுக்க சோதனைச்சாவடிகளில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மீனாட்சிபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆனைமலை எஸ்.ஐ முருகவேல் தலைமையிலான போலீஸார், கேரளாவிலிருந்து அம்பராம்பாளையம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும், தார்ப்பாய் உள்ளேயும் மறைத்து வைத்திருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் வந்த அம்பராம்பாளையத்தைச் சேர்ந்த உமர், முருகன், சுப்ரமணியன், முருகேசன், கங்காதரன், விஜயகுமார், பிரதீப் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT