Regional01

அருப்புக்கோட்டை அருகே - வேனில் கடத்திச் சென்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் :

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை அருகே வேனில் கடத்திச் சென்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார், காவலர் தினேஷ் ஆகியோர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த வேனை போலீஸார் நிறுத்தியபோது நிற்காமல் சென்றது. அதையடுத்து வேனை விரட்டிச் சென்று போலீஸார் பிடித்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது. அதையடுத்து கடத்திச் செல்லப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய வேன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் வேனை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், மாரிசெல்வன் ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

கடத்திச் சென்ற அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய வேன் மற்றும் பிடிபட்ட இருவர் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT