ஊராட்சி மன்ற அலுவலம் எதிரே ஊராட்சி தலைவரைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள். 
Regional01

திட்டக்குடியில் ஊராட்சித் தலைவரை கண்டித்து பெண் கவுன்சிலர்கள் தர்ணா :

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த சிறுமுளை கிராமத்தில் 3,4,5வது வார்டு கவுன்சிலர்கள் ரேவதி, சுமதி, தங்ககிளி ஆகியோர் ஊராட்சி அலுவலகம் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

தங்களது வார்டுகளில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. சாக்கடை கால்வாய் சீர் செய்ய வில்லை. சுடுகாட்டிற்கு செல்லும் பாதை இருபுறமும் சீமைக்கருவேலி ஆக்கிரமித்து உள்ளதால் உயிரிழந்தவர்களின் உடலைக் அடக்கம் செய்ய இயலவில்லை. சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்ய கை பம்பு இல்லை.

இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறி இந்த 3 பெண் கவுன்சிலர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திட்டக்குடி போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சித் தலைவரிடம் பேசி தங்கள் கோரிக்கையை விரைவில் சரி செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT