இதன்படி 2019-2020-ல் 10, பிளஸ்-2-வில் அதிக மதிப்பெ ண்கள் பெற்ற மதுரை மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 14 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் எஸ்பி வீ.பாஸ்கரன், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘‘ஊக்கத் தொகை பெறுவோர் நன்றாகப் படித்து, சமுதாயத்தில் நல்ல குடிமகன்களாக வர வேண்டும். பெற்றோருக்கும் நல்ல பெயர் எடுத்துத் தரவேண்டும்,’’ என்றார்.