Regional01

55 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை :

செய்திப்பிரிவு

தமிழகத்துக்கு புதிதாக 3 லட்சத்து 13 ஆயிரத்து 760 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று முன்தினம் வரப்பெற்றதுடன், அதனை 19 மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டன. இதில், வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர் சுகாதார மாவட்டத்துக்கு 12 ஆயிரம், திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 9 ஆயிரத்து 500, செய்யாறு சுகாதார மாவட்டத்துக்கு 7 ஆயிரத்து 500, திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்துக்கு 14 ஆயிரத்து 500, ராணிப்பேட்டை சுகாதார மாவட்டத்துக்கு 11 ஆயிரத்து 500 என மொத்தம் 55 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று காலை வரப்பெற்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT