விருதுநகர் மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் - மாணவர்களுக்கு வழங்க 10 லட்சம் புத்தகங்கள் தயார் :

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் நடப்புக் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 2.25 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டது. தொடர்ந்து கரோனா 2-வது அலை பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டிலும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 2.25 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அரசு பாடப் புத்தகங்கள் வந்துள்ளன. அதில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1.76 லட்சம் புத்தகங்களும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4.78 லட்சம் புத்தகங்களும், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு 3.49 லட்சம் புத்தகங்களும் என மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளன.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பாடங்களுக்கான இலவச புத்தகங்களும் வந்துள்ளன.

அரசு வழிகாட்டுதல்படியும், அரசு அறிவிக்கும் தேதியில் இருந்தும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங் கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்