சிவகங்கையில் தத்தளித்த அபூர்வ வகை ஆந்தை மீட்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அபூர்வ வகை ஆந்தை சுற்றி திரிந்தது. அந்த ஆந்தையை சில காகங்கள் கொத்திக் காயப்படுத்தின. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு அந்த ஆந்தையை வனத்துறையினர் சிவகங்கை அருகேயுள்ள காட்டுப்பகுதியில் விட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘இது கூகை ஆந்தை (பான் அவுல்) என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படும் அபூர்வ வகை., என்றனர்.