ஈரோடு: கரோனா ஊரடங்கு தொடரும் நிலையில், உயிர்காக்கும் மருந்துகள், பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்றவற்றை வெளியூர்களுக்கு அனுப்ப அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பரவல் உள்ள சூழலில், உயிர்காக்கும் மருந்துகள், மாத்திரைகள், காவச உடை, முகக்கவசம், பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் மருத்துவ சாதனங்களை விரைவுத் தபால் மற்றும் பார்சல் சேவை மூலம் வெளியூர்களுக்கு அனுப்ப அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஈரோடு அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.