Regional01

ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல் :

செய்திப்பிரிவு

திருச்சி: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முகக்கவசம், கையுறை, நெபுலைசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதாவிடம் ஒப்படைத்தனர்.

சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்.பி சு.திருநாவுக்கரசர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கா.உதுமான் அலி, ஆ.மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT