வேலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி ரத்து :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் கிராம கணக்குகள் தணிக்கை மட்டும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனா தாக்கத்தால் 2020-21-ம்ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மற்றும் விவசாய மாநாடு ரத்து செய்யப் படுகிறது. வரும் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கிராம கணக்குகள் தணிக்கை மட்டும் நடைபெறும். பொதுமக்கள் ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் யாரும் வரவேண்டாம்.

பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக வரும் ஜூலை 31-ம் தேதி வரை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இந்த மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு தகவல் வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

20 mins ago

உலகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்