வேலூர் மீன் மார்க்கெட்டில் வியாபார நேரம் மாற்றம் :

By செய்திப்பிரிவு

வேலூர் மீன் மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்வதற்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத் தப்பட்ட பிறகு, வேலூர் கோட்டை அருகேயுள்ள மீன் மார்க்கெட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இங்கு மொத்த வியாபாரம் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடிக் கையாளர்கள் நேரடியாக சென்று மீன்களை வாங்க முடியாது.

மீன் மார்க்கெட்டில் காலை 6 மணிக்கு பிறகு வியாபாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வேலூரில் இருந்து திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மீன்களை அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் மீன் மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்துக்கு அனுமதி வழங்கினால், வேலூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மீன் களை எளிதாக சப்ளை செய்ய முடியும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு மீன் மொத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வேலூர் மீன் மார்க்கெட்டில் இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மொத்த வியாபாரம் செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அனுமதி வழங்கினார். அதன்படி மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 12 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டு அதிகாலை 6 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

மீன் மார்க்கெட் அருகே உள்ள லாரி செட்டில் சில்லறை விற்பனை மீன் இறைச்சி கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. இங்கு பொதுமக்கள் சமூக இடை வெளியுடன் சென்று மீன்களை வாங்கி செல்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

24 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

32 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்