நாமக்கல்: குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பல்ஸ் ஆக்சி மீட்டர்களை தலைமை மருத்துவர் பாரதியிடம் தன்னார்வலர்கள் வழங்கினர். மேலும் தேவைப்படும் உதவிகள் அவ்வப்போது வழங்குவதாகவும் தன்னார்வலர்கள் உறுதியளித்தனர்.