Regional01

சென்னை ஏரிகளில் : நீர் இருப்பு குறைந்தாலும் : தட்டுப்பாடு இருக்காது :

செய்திப்பிரிவு

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கோடை வெப்பம், கூடுதல் தண்ணீர் தேவை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவு தண்ணீர் எடுப்பதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஏரிகளில் உள்ள தண்ணீர் மட்டும் அல்லாமல் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீர் பெற முடியும் என்பதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பே இல்லை.

சென்னை குடிநீர் ஏரிகள், கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டு நிலையங்கள், குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகள், வீராணம் ஏரி ஆகிய நீர் ஆதாரங்களில் இருந்து நீர் பெறப்பட்டு சென்னைக்கு விநியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT