ஐபிஎஸ் அதிகாரிகள் இருவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வெளியிட்ட உத்தரவு:
சென்னை போலீஸ் அகாடமி இயக்குநர் பதவி வகிக்கும் டிஜிபி பிரதீப் வி.பிலிப், அடுத்த உத்தரவு வரும் வரை கூடுதலாக சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரியின் டிஜிபியாகவும் பொறுப்பு வகிப்பார்.
உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆபாஷ் குமார், அடுத்த உத்தரவு வரும் வரை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவையும் கூடுதலாகக் கவனிப்பார்.
கன்னியாகுமரி குளச்சல் சப்-டிவிஷன் ஏஎஸ்பி விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி, ஆளுநர் மாளிகை காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி எஸ்பி அந்தஸ்தில்இருந்து ஏஎஸ்பி அந்தஸ்துக்கு நிலை இறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.