Regional01

துப்புரவு பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கல் :

செய்திப்பிரிவு

புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 136 துப்புரவு பணியாளர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் 136 துப்புரவு பணியாளர் இடம் காலியாக இருந்தன. இதையடுத்து, ஒப்பந்த அடிப்படையில் டிகேடி செக்யூரிட்டி சர்வீசஸ் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை, சமுதாய நல வழி மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய 136 துப்புரவுபணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரிசட்டப்பேரவை வளாகத்தில்ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு நேற்று முன்தினம் முதல்வர் ரங்கசாமி பணி ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது சுகாதாரத்துறை செயலர் அருண், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT