தேனி, விருதுநகரில் 500 படுக் கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையங்களை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உத்தமபாளையம், கோம்பை யில் உள்ள குடிசை மாற்று வாரியக் கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கரோனா மையத்தை காணொலியில் முதல் வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.
விருதுநகர் அரசு மருத்துவ மனை அருகில் உள்ள கே.வி.எஸ் நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கரோனா மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர் கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, தனுஷ் எம்.குமார் எம்பி, எம்எல்ஏக்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், ஏ.மகாராஜன், எஸ்.சரவணக் குமார், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ்.தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், விருதுநகர் ஆட்சியர் இரா.கண்ணன், தேனி ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி ஆகியோர் பங்கேற்றனர்.