திருச்சி: திருச்சி கீழஅம்பிகாபுரம் முனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(51). இந்து முன்னணியின் திருச்சி மாவட்டச் செயலாளரான இவர், வயலூர் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கிருந்த மருத்துவர் கிங்ஸ்லி ஜெபக்குமார் என்பவர் ஆறுமுகத்திடம் பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் பற்றி தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் மருத்துவர் கிங்ஸ்லி ஜெபக்குமார் மீது உறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.