மூலக்குளம் அருகே வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவுசெய்ததால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி மூலக்குளம் சாலை தெருவைச் சேர்ந்தவர் ஜான்பிராஸ்வா. இவரது மனைவி ஜெனிதாமேரி. இருவரும் ஒரேநிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களது மகள் இசபெல்லா ஜஸ்டின் காஸ்டன் (16). இவர் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்.
இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக இசபெல்லா ஜஸ்டின் காஸ்டனை அரசுப் பள்ளியில் சேர்க்க அவரது பெற்றோர் முடிவு செய்திருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் மாணவியின் பள்ளி தோழிகள் தாங்கள் அதே பள்ளியில் மேற்படிப்பிற்காக ஆன்லைன் வகுப்பில் படித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் மாணவி மன வருத்தத்தில் இருந் தார்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் ஜான்பிராஸ்வாவும் அவரது மனைவி ஜெனிதாமேரியும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர்.
வீட்டில் இசபெல்லா ஜஸ்டின் காஸ்டன் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து கணவன்-மனைவி வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாணவி மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இசபெல்லா ஜஸ்டின் காஸ்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜான் பிராஸ்வா ரெட்டியார்பாளையம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.