புதுச்சேரி கதிர்காமம், மங்கலம் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டியின் அமைப்புசாரா தொழிலாளர்கள் காங்கிரஸ் பிரிவின் மாநில தலைவர், ராஜ்பவன் தொகுதியின் வடக்கு பகுதி, தெற்கு பகுதி வட்டார காங்கிரஸ் தலைவர்கள் இரு தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கதிர்காமம் தொகுதி, வட்டார காங்கிரஸ் கமிட்டி (வடக்குப் பகுதி) தலைவராக சுந்தர் (எ) முனிசாமியும், மங்கலம் தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி (தெற்குப் பகுதி) தலைவராக வீரமுத்துவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் நியமித்துள்ளார்.