வேப்பூர் அருகே - மாவு மில்லுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது :

By செய்திப்பிரிவு

வேப்பூர் அருகே மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

வேப்பூர் வட்டம் குளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்ல தம்பி. இவர் புதிதாக மாவு மில் கட்டியுள்ளார். இந்த மாவு மில்லுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று அடரியில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்துள்ளார்.அந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக இருக்கும் ரவிச் சந்திரன், மின் இணைப்பு தருவதற்கு நல்லதம்பியிடம் ரூ. 5 ஆயிரம் லட்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து நல்லதம்பி கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் நல்லதம்பியிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தனர். அடரியில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்று நேற்று சென்ற நல்லதம்பி, வணிக ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மெல்வின் ராஜாசிங் தலைமையிலான போலீஸார் ரவிச்சந்திரனை (49) கைது செய்தனர்.

அடரியில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

16 mins ago

சுற்றுச்சூழல்

22 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

56 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்