Regional01

எஸ்பிஐ வீட்டுக் கடன் மேளாரூ.45 கோடி கடன் வழங்க ஒப்புதல் -

செய்திப்பிரிவு

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நடத்திய வீட்டுக் கடன் மேளாவில், 101 வாடிக்கையாளர்களுக்கு ரூ.45 கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின்சென்னை மத்திய மண்டலம்சார்பில், கனவு இல்ல மேளா என்ற பெயரில் வீட்டுக் கடன் மேளா, வடபழனியில் 2 நாட்கள் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 6.70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், அவர்கள் வீட்டுக் கடனை எளிதாக பெறும் வகையிலும் இந்தக் கடன் மேளா நடத்தப்பட்டது.

இதில், 101 வாடிக்கையாளர்களுக்கு ரூ.45 கோடி வரை கடன் வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வரை வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு செயல்பாட்டுக் கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT