Regional01

பாகூரில் வேட்பு மனுத்தாக்கல் செய்த - முன்னாள் அமைச்சர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றார் :

செய்திப்பிரிவு

பாகூரில் வேட்பு மனுத்தாக்கல் செய்த முன்னாள் அமைச்சரான தியாகராஜன் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றார். கரோனா பாதிப்பால் தற் போது அவர் சென்னையில் சிகிச்சை யில் உள்ளதாக அவரது ஆதரவாளர் கள் தெரிவித்தனர்.

புதுவை பாகூர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் 2011-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர் தியாகராஜன். 2016 தேர்தலில் தியாகராஜன் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் வரும்சட்டப்பேரவை தேர்தலில் தியாகராஜனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. முன்னாள் எம்எல்ஏ தனவேலு என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். இதனால் அதிருப்தியடைந்த தியாகராஜன் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இருளன்சந்தை யில் உள்ள அவரது வீட்டில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அவரை சந்தித்து சமாதானப்படுத்தினார். இதனையடுத்து தியாகராஜன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ்பெற்றார்.

இதனிடையே தியாகராஜ னுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக சென்றார்.

அவரை பரிசோதித்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால்சென்னையில் உள்ள மருத்துவமனையில் தியாகராஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT