இதுகுறித்து கேட்டபோது அவர்கள் போதிய விளக்கமளிக் கவில்லை. கைது நடவடிக்கையில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் கடைபிடிக்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் அதிமுகவினரால் கொடுக்கப்படும் பொய் புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதிமுகவுக்கு சாதகமாகவும், திமுகவுக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். கட்சி தலைவரின் தேர்தல் அறிக்கையை விளக்கி முகநூலில் பதிவிட்டதற்காக திமுகவினரை வேண்டுமென்றே அச்சுறுத்தும் நோக்கில், அதிகாலை நேரத்தில் கைது செய்த நடவடிக்கை ஒரு தலைப்பட்சமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் அத்துமீறி செயல்படும் போலீஸாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.