கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற்சங்கத்தினர். படம்:ஜெ.மனோகரன் 
Regional01

அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எம்எல்எஃப் தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் மு.தியாகராசன் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, எல்பிஎஃப், எம்எல்எஃப், ஏஐசிசிடியு, எஸ்டிடியு ஆகிய தொழிற்சங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எல்ஐசி உள்ளிட்ட பொது காப்பீட்டு நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும், அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

SCROLL FOR NEXT