கண்காணிப்பு குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளர் அறிவுரை

By செய்திப்பிரிவு

கண்காணிப்பு குழுக்கள் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் நேற்று அரசியல் கட்சி கள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் கணக்கிடுவது தொட ர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செலவின மேற்பார்வையாளர் வீ.பட்டணஷெட்டி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண்குராலா ஆகியோர் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் செலவின மேற்பார்வையாளர் பேசியது:

வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாளிலிருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரை மேற்கொள்ளப்பட்ட வேட்பாளரின் செலவினங்கள் தேர்தல் செலவினமாக கருதப்பட வேண்டும்.

வீடியோ படப்பிடிப்புக்குழு, வீடியோ பார்வையிடும் குழு மற்றும் கணக்கீட்டு குழுவினர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

உதவி செலவின பார்வையாளர்கள் நிழல் கவனிப்பு பதிவேடு, ஆதார கோப்புகள் மற்றும் வேட்பாளரின் செலவின பதிவேட்டை அவ்வப்போது கண்காணிப்பு செய்ய வேண்டும்.

உதவி செலவின பார்வையாளருக்கு புகார் வரப்பெற்ற உடன்,புகாரை தொடர்புடைய பறக்கும் படைக்கு தெரிவித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி சார் - ஆட்சியர் எச்.எஸ்.காந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு உள்ளிட்ட அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

35 mins ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்