ஆலங்காயத்தில் மூலிகை தோட்டம் அமைக்க 30 வகையான மூலிகைச் செடிகளை சித்த மருத்துவர் பாஸ்கரன், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதியிடம் வழங்கினார். அருகில், அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் உள்ளிட்டோர். 
Regional01

ஆலங்காயத்தில் மூலிகை தோட்டம் அமைக்கும் பணி :

செய்திப்பிரிவு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார மையத்தில் மூலிகை தோட்டம் அமைக்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமை வகித்தார்.

ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவப்பிரிவு தலைமை மருத்துவர் வி.விக்ரம்குமார் முன்னிலை வகித்தார். வேலூர் புற்று மகரிஷி சித்த மருத்துவ சேவை மையத்தின் இயக்குநர் மருத்துவர் டி.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார மையத்தில் மூலிகை தோட்டம் அமைப்பதற்காக 30 வகையான மூலிகைகளை ஆலங்காய வட்டார மருத்துவ அலுவலர் பசுபதியிடம் வழங்கினார். இதைக்கொண்டு, ஆலங்காயம் சமுதாய சுகாதார மையத்தில் மூலிகை தோட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT