சென்னை மாநகராட்சி ஓய்வூதியர்களின் உயிர்வாழ் சான்று ஜூலையில் சரிபார்க்கப்படும் 3 மாதங்கள் நடைபெறும் என தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி ஓய்வூதியர்களிடம் இருந்து சரிபார்ப்புக்காக உயிர்வாழ் சான்று பெறும் பணி ஜூலை முதல் 3 மாதங்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் வருடாந்திர சரிபார்ப்புக்காக உயிர்வாழ் சான்று அளிக்கும் காலத்தை மாற்றம் செய்தும், கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் சிறப்பு நிகழ்வாக உயிர்வாழ் சான்றிதழ் அளிப்பதில் இருந்து விலக்களித்தும் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

மார்ச் மாதம் வரவேண்டாம்

இந்நிலையில், நடப்பாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களிடம் வருடாந்திர சரிபார்ப்புக்காக உயிர்வாழ் சான்று பெறும் பணிகள் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலகத்துக்கு உயிர்வாழ் சான்று வழங்க மார்ச் மாதம் வர வேண்டாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்