கோவை நீலிக்கோணாம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்-தனலட்சுமி தம்பதியின் மகள் ஹேம வர்ணா (6). இந்நிலையில், தனலட்சுமியும், ஹேம வர்ணாவும் கடந்த 21-ம் தேதி மைசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்தபோது ஹேம வர்ணாவின் விரல் கதவில் சிக்கி நசுங்கியுள்ளது. அங்கு முதலுதவிக்குப்பின், கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கடந்த 26-ம் தேதி சிறுமியை அனுமதித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 27-ம் தேதி சிறுமி உயிரிழந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சிறுமியின் தந்தை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.