Regional01

மீனவர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

செய்திப்பிரிவு

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் (எ) சிவக்குமார் (41), மீனவர். கடந்த 27-ம்தேதி பனித்திட்டு ஊத்துகாட்டுமாரியம்மன் கோயில் கும்பாபி ஷேக விழாவையொட்டி வீரப்பன் தனது குடும்பத்தினருடன் கோயி லுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் ஓரமாக மறைத்து வைத்திருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர்கள், வேறொரு இடத் திலிருந்து சாவியை எடுத்து கதவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வீரப்பன் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணைநடத்தினர். தொடர்ந்து அப்பகு தியில் பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT