நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலராக நாமக்கல் கோட்டாட்சியரும், திருச்செங்கோடு தொகுதிக்கு திருச்செங்கோடு கோட்டாட்சியரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல் ராசிபுரம் (தனி) தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர், சேந்தமங்கலம் (எஸ்டி) தொகுதிக்கு சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர், பரமத்தி வேலூா் தொகுதிக்கு மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலர், குமாரபாளையம் தொகுதிக்கு மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆகியோர் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக நியமித்து அரசு அறிவித்துள்ளது.