Regional01

அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகி யவை 2013-ம் ஆண்டு முதலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்துத் துறை யின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த ஐஆர்டி மருத்துவக் கல்லூரி கடந்தாண்டு முதலும் அரசின் கீழ் செயல் பட்டு வருகின்றன.

இந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில், தமிழ்நாட்டில் உள்ள இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்டு வரும் கல்விக் கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிக் கப்படுவதாக மாணவர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்ற னர்.

இதற்கிடையே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கல்விக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, அரசின் சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக நேற்று அரசாணை வெளியானது.

இந்நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.கணபதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT