மாநகராட்சி வார்டு அலுவலகத்துக்குள் ஆமை விடும் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி வார்டு அலுவலகத்துக்குள் ஆமை விடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

மாநகராட்சி 30-வது வார்டு விவேகானந்தா நகர், ராஜீவ் காந்தி நகர், முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு, கணேசபுரம், மூகாம்பிகை நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், இதன்காரணமாக குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, புதை சாக்கடைப் பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி மேலகல்கண்டார்கோட்டையில் உள்ள வார்டு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆமை விடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பகுதிச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வார்டு அலுவலகத்துக்கு முன் ஆமையை சாலையில் விட்டனர். போலீஸார் அந்த ஆமையை பறிமுதல் செய்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, வார்டு அலுவ லகத்தை முற்றுகையிடுவதற்காகச் சென்றபோது போலீஸார் அதைத் தடுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நேரிட்டது. இதை யடுத்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சம்பத், பகுதிக் குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிக் குழு உறுப்பினர்கள் முத்துக் குமார், துரைராஜ், விஜயேந்திரன், புவனேஸ்வரி, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE