மத்திய மண்டலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 41 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 பேருக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மத்திய மண்டலத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 41 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத் துள்ளது. 2-வது நாளாக இன்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் நேற்று கலந்தாய்வு தொடங்கியது. நாளை வரை நடைபெற உள்ள இக்கலந்தாய்வின் முதல் நாளான நேற்று புதுக் கோட்டை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 59 பேரில் 13 பேர் கலந்துகொண்டனர்.

இதில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், எ.திவ்யா, எம்.பிரசன்னா, எம்.தார்ணிகா, சி.ஜீவிகா, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.ஹரிஹரன், மழையூர் அரசுப் பள்ளி மாணவர் கே.பிரபாகரன், தாந்தாணி அரசுப் பள்ளி மாணவி எம்.கிருஷ்ணவேணி, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எச்.சுகன்யா, வெட்டன்விடுதி அரசுப் பள்ளி மாணவர் எல்.அகத்தீஸ்வரன், சிதம்பரவிடுதி அரசுப் பள்ளி மாணவர் டி.கவிவர்மன், அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.புவனேஸ்வரி என 11 பேர் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

கலந்தாய்வில் பங்கேற்ற வடகாடு அரசுப் பள்ளி மாணவர் பி.பவித்ரன் மற்றும் மறமடக்கி அரசுப் பள்ளி மாணவி எ.நித்யா ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இன்று நடைபெற உள்ள கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 46 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் 9 பேர்

திருச்சி மாவட்டத்தில் லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.ஹரிகிருஷ்ணன், செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.வெள்ளைச்சாமி, மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.சுகந்தினிமா, எஸ்.அபிநயா, திருப்பஞ்சீலி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.கிருஷ்ண குமார் ஆகியோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

தண்டலைப்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த என்.பாரதி, மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹெச்.கிஷோர்குமார் ஆகி யோர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். இவர்கள் அனைவரும் நீட் தேர்வில் முதல் முயற்சியில் வென்றவர்கள்.

இவர்களைத் தவிர, 2-வது முறையாக நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற காட்டுப்புத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எஸ்.சரோஜினி, மண்ணச்ச நல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பி.சத்யா, திருவெள்ளறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஜி.கலையரசி, பச்சபெருமாள்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கே.ஆர்த்தி ஆகியோருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேர்

இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அபிதா, ஜெயசூர்யா, கார்த்திகேயன், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி ராதா, மணிகண்டன் ஆகியோ ருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயில இடம் கிடைத்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 2 பேர்

திருவாரூர் மாவட்டம் திருமக் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா, கடந்த 2016-17-ம் ஆண்டில் நன்னிலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி வர்ஷா ஆகியோர் எம்பிபிஎஸ் பயில அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் 8 பேர்

தஞ்சாவூர் மாவட்டம் அனந்த கோபாலபுரம் அரசுப் பள்ளி மாணவர் விஸ்வநாத வர்மன், பழைய மாணவ, மாணவிகளான மதுக்கூர் அரசுப் பள்ளி சுபேதா, சபிதா, வெட்டிக்காடு அரசுப் பள்ளி அருள்மொழி,பாப்பாநாடு அரசுப் பள்ளி முல்லைவேந்தன், பந்தநல்லூர் அரசுப் பள்ளி பரணிகா, திருபுவனம் அரசுப் பள்ளி விக்னேஷ், பேராவூரணி அரசுப் பள்ளி சஹானா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இடம் தேர்வு செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் 4 பேர்

கரூர் மாவட்டம் க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சுவேதா, பழைய மாணவ, மாணவிகளான கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சுஸ்மிதா, தரகம்பட்டி மாடல் பள்ளி நிதீஷ், வாங்கல் பள்ளி மாரிமுத்து ஆகியோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர நேற்று இடம் கிடைக்கவில்லை.

நாகை மாவட்டத்தில் 2 பேர்

நாகை மாவட்டம் ஆக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.மணிகண்டன், ஆயக்காரன்புலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வேதா ஆகியோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

இதன்படி திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 41 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்