கடந்த 24 மணி நேரத்தில்7,350 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,350 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளி கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 97,860 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 91,456 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 202 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 75,636 ஆக உயர்ந்துள்ளது. மொத்த நோயாளிகளில் சிகிச்சையில் இருப்போர் விகிதம் 0.26 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.37 சதவீதமாக உள்ளது.

தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.86 சதவீதமாக உள்ளது. வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 0.69 சதவீதமாக உள்ளது. இது கடந்த 29 நாட்களாக 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் பணியில் 133.17 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் மொத்த உயிரிழப்பு 4,75,636 ஆக பதிவாகியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் 1,41,259 பேர், கேரளாவில் 42,967 பேர், கர்நாடகாவில் 38,261 பேர், தமிழ்நாட்டில் 36,612 பேர், டெல்லியில் 25,100 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு அந்த புள்ளிவிவரத் தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

12 hours ago

மேலும்