கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்கள் போரில் வென்றதை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது தசரா விழாவை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி 9 நாள் நடைபெறும் 411-வது மைசூரு தசரா விழாவை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மைசூரு மகாராஜா யதுவீர் முன்னிலையில் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று தொடங்கி வைக்கிறார். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தசரா விழாவில் பொதுமக்கள் பங்கேற்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.